ADDED : டிச 29, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத் தின் கீழ், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், பிராட்வே, டேவிட்சன் சாலையில், 18.24 கோடி ரூபாய் செலவில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
அதன் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பிராட்வே பிரகாசம் சாலையில் மாநகராட்சி சார்பில் 1.26 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட 128 புதிய மின் விளக்குகளையும் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
மேலும், குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் 27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் கீழ்நிலை, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியை அவர் ஆய்வு செய்தார்.

