/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெல் கொள்முதல் திடீர் நிறுத்தம் விவசாயிகள் மத்தியில் கலக்கம்
/
நெல் கொள்முதல் திடீர் நிறுத்தம் விவசாயிகள் மத்தியில் கலக்கம்
நெல் கொள்முதல் திடீர் நிறுத்தம் விவசாயிகள் மத்தியில் கலக்கம்
நெல் கொள்முதல் திடீர் நிறுத்தம் விவசாயிகள் மத்தியில் கலக்கம்
ADDED : செப் 23, 2025 01:39 AM

சென்னை:முன்னறிவிப்பு இன்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், 15 நாட்களாக அரசின் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது, விவசாயிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூரில், 66,690 ஏக்கர், செங்கல்பட்டு மாவட்டத்தில், 32,851 ஏக்கர், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 27,170 ஏக்கரில் இந்தாண்டு, நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. சாகுபடி செய்யப்பட்ட நெல், அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
நெல் மூட்டைகளை டிராக்டர், மினி லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றி, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் எடுத்து செல்கின்றனர்.
ஆனால், எந்த முன்னறிவிப்பும் இன்றி, 15 நாட்களாக இம்மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதனால், மழையில் நனையும் நெல் மூட்டைகள், முளைப்பு எடுத்தால், விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
கிடங்கில் இடமில்லாததாலும், அரசிடம் நிதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தாலும் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட விவசாய சங்க தலைவர் ஆஞ்சநேயலு கூறியதாவது:
நாள்தோறும் கொள்முதல் செய்யும் நெல்லை, அரவை மில்லுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், சேமிப்பு கிடங்குகள் இல்லாததால், அவை அங்கேயே வைக்கப்பட்டு உள்ளது.
இதனால், கொள்முதல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலம் துவங்கவுள்ளதால், நெல் மூட்டைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.