/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - கிண்டி - வேளச்சேரி கலங்கரை விளக்கம் - ஐகோர்ட் 'மெட்ரோ' திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
/
தாம்பரம் - கிண்டி - வேளச்சேரி கலங்கரை விளக்கம் - ஐகோர்ட் 'மெட்ரோ' திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
தாம்பரம் - கிண்டி - வேளச்சேரி கலங்கரை விளக்கம் - ஐகோர்ட் 'மெட்ரோ' திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
தாம்பரம் - கிண்டி - வேளச்சேரி கலங்கரை விளக்கம் - ஐகோர்ட் 'மெட்ரோ' திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்
ADDED : ஆக 12, 2025 12:30 AM

சென்னை, தாம்பரம் - கிண்டி - வேளச்சேரி, கலங்கரை விளக்கம் - உயர் நீதிமன்றம் மெட்ரோ திட்டத்திற்கு விரிவான அறிக்கை தயாரிக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று, எம்.வி.ஏ.கன்சல்டிங் இந்தியா பி.லிட்., என்ற நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில், 69,180 கோடி ரூபாய் செலவில், 116 கி.மீ., மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், பூந்தமல்லி - பரந்துார், கோயம்பேடு - ஆவடி என, அடுத்தடுத்து, மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இதையடுத்து, தாம்பரம் - கிண்டி - வேளச்சேரி மெட்ரோ ரயில் தடத்தில் மேடவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி ஆகிய 21 கி.மீ., புறநகர் பகுதிகள், கிண்டி மெட்ரோவுடன் இணைக்கப்பட உள்ளன.
கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை, தலைமை செயலகம் வழியாக உயர் நீதிமன்றம் வரையிலான 7 கி.மீ., பகுதிகள், மெட்ரோ திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, சிஸ்ட்ரா எம்.வி.ஏ.கன்சல்டிங் இந்தியா பி.லிட்., என்ற நிறுவனத்துடன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று ஒப்பந்தம் செய்தது.
கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம் தடத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 38.20 லட்சம் ரூபாய்; தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான மெட்ரோவுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க, 96.19 லட்சம் ரூபாயக்கான ஒப்பந்தம் வழங்கப் பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் சிஸ்ட்ரா எம்.வி.ஏ., கன்சல்டிங் நிறுவன துணைத் தலைவர் பர்வீன் குமார் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
விரிவான திட்ட அறிக்கைகளை, 120 நாட்களில் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.
திட்ட அறிக்கையில் வழித்தடங்கள், போக்குவரத்து நெரிசல், செலவுகள், மொத்த திட்ட மதிப்பீடு, பல்வேறு போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குறித்து முழு விபரங்கள் இடம்பெறும்.
அறிக்கை கிடைத்ததும், மத்திய, மாநில அரசின் ஒப்புதல் பெற்று மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.