/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கி யில் தமிழகம் - கர்நாடகா 'டிரா'
/
ஹாக்கி யில் தமிழகம் - கர்நாடகா 'டிரா'
ADDED : பிப் 15, 2024 12:43 AM

சென்னை, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின், 35வது அகில இந்திய அஞ்சல் துறை ஹாக்கி போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நடந்து வருகிறது.
இதில் தமிழகம், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய ஐந்து அணிகள் 'லீக்' முறையில் மோதி வருகின்றன.
நேற்று காலை 7:00 மணிக்கு நடந்த முதல் போட்டியில், ஒடிசா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.
விறுவிறுப்பான போட்டியில், 6 - 2 என்ற கணககில், ஒடிசா அணி வெற்றி பெற்றது. போட்டியில், பஞ்சாப் வீரர் சஞ்சய் குமாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து மதியம், 2:00 மணிக்கு நடந்த ஆட்டத்தில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
அதில், 1 - 1 என்ற கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கர்நாடகா வீரர் நாகராஜ், ஆட்ட நாயகனுக்கான விருது பெற்றார். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

