/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய வில்வித்தை போட்டி தமிழக வீரர்கள் அபாரம்
/
தேசிய வில்வித்தை போட்டி தமிழக வீரர்கள் அபாரம்
ADDED : ஏப் 03, 2025 11:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
ஆந்திர மாநிலம், குண்டூரில், தேசிய அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, ஏப்., 1ல் நடந்தது. போட்டியில், நாடு முழுதும் இருந்து பல்வேறு மாநில அணிகள் பங்கேற்றன. இதில், தமிழ்நாடு வில்வத்தை சங்கம் சார்பில், சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.
அதன்படி, 15 வயதுக்குட்பட்ட பிரிவிற்கான போட்டியில், தமிழக அணி ஒட்டு மொத்தமாக, 30 பதக்கங்களை வென்று அசத்தியது. அதில், சென்னையை சேர்ந்த தியான் சந்த் ஸ்போர்ட்ஸ் அகாடமி சிறுவர்கள், ஏழு தங்கம், ஆறு வெள்ளி, இரண்டு வெண்கலம் என, மொத்தம் 15 பதக்கங்களை வென்று சாதித்தனர்.

