/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய எழுவர் கால்பந்து போட்டி ஜூனியரில் தமிழகத்திற்கு தங்கம்
/
தேசிய எழுவர் கால்பந்து போட்டி ஜூனியரில் தமிழகத்திற்கு தங்கம்
தேசிய எழுவர் கால்பந்து போட்டி ஜூனியரில் தமிழகத்திற்கு தங்கம்
தேசிய எழுவர் கால்பந்து போட்டி ஜூனியரில் தமிழகத்திற்கு தங்கம்
ADDED : நவ 24, 2025 01:48 AM

சென்னை: இந்திய எழுவர் கால்பந்து கூட்டமைப்பு சார்பில்,26வது தேசிய எழுவர் கால்பந்து சாம்பியன்ஷி ப் போட்டி, கோவாவில் கடந்த, 21ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது.
இதில், 19 வயது ஜூனியர் பிரிவில், தமிழக அணி துவக்கம் முதல் சிறப்பான தாக்குதலும், ஒற்றுமையான கூட்டுப்பணியும் வெளிப்படுத்தி, அரையிறுதிக்குள் முன்னேறியது.
முதல் அரையிறுதியில் ஜார்கண்ட் அணியை, 3 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தமிழக வீரர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். மற்றொரு அரையிறுதியில் சத்தீஸ்கர் அணியை, 2-0 என்ற கோல் கணக்கில், உத்தர பிரதேச அணி வென்றது.
இறுதிப்போட்டியில், தமிழக வீரர்கள் ஆட்டத்தை முழுமையாக கட்டுக்குள் வைத்து, உத்தர பிரதேச அணியை, 2 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தங்க பதக்கம் வென்றனர்.
அதேபோல், 17 வயதினருக்கான சப் - ஜூனியர் பிரிவில் இறுதிப்போட்டியில், தமிழக அணி மகாராஷ்டிராவுடன் மோதியது. கடைசி நிமிடங்கள் வரை பதட்டமாக நடந் த போட்டியில், தமிழக அணி, 0 - 1 என்ற கோல் கணக்கில் தோற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றது.

