தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/காலி கன்டெய்னர்களை கையாள கட்டணம் சுங்க முகவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

காலி கன்டெய்னர்களை கையாள கட்டணம் சுங்க முகவர்கள் தொடர் வேலைநிறுத்தம்

காலி கன்டெய்னர்களை கையாள கட்டணம் சுங்க முகவர்கள் தொடர் வேலைநிறுத்தம்


ADDED : நவ 15, 2026 06:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தால், சட்டவிரோதமாக வசூலிக்கப்படும் புதிய கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, சென்னை சுங்க முகவர்கள் சங்கம், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை இன்று (நவ.,15) தொடங்கியது.

இது குறித்து, சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலர் சேகர் அளித்த பேட்டி:

ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கும், கப்பல் போக்குவரத்து மற்றும் சுங்கத் துறை அலுவலகத்திற்கும் இடையிலான, அனைத்து ஆவண பரிவர்த்தனைகளை சட்டபூர்வமாக நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இந்நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி., என்ற தனியார் கப்பல் நிறுவனம், எங்களது காலி கன்டெய்னர்களை நாங்கள் கையாள்வதற்கு 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

அடுத்தடுத்து இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது. தவிர, முறையற்ற வகையில் பணப் பரிவர்த்தனை நடக்கும் அபாயம் உள்ளது.

சென்னையில் உள்ள மூன்று துறைமுகங்கள் வழியாக, மூன்று லட்சம் சரக்கு பெட்டகங்கள் வரை கையாளப்படுகின்றன. இவை அனைத்திற்கும் கட்டணம் விதிக்கப்பட்டால், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வரை, வர்த்தகர்களுக்கு கூடுதல் இழப்பு ஏற்படலாம். இது குறித்து, மத்திய அரசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, இன்று – நேற்று – முதல் எம்.எஸ்.சி., தனியார் கப்பல் நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான சரக்கு பெட்டகங்களை புறக்கணிக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வரும் டிச., 15 முதல் இறக்குமதியாகும் அந்த நிறுவனத்தின் சரக்கு பெட்டகங்களையும் கையாள மாட்டோம்.

எனவே, மத்திய கப்பல் போக்குவரத் துறை அமைச்சகம், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us