/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதிய சிமென்ட் சாலையை தோண்டி குடிநீர் குழாய் பதிப்பதால் பாதிப்பு அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால் வரி பணம் வீண்

ADDED : ஏப் 23, 2025 12:41 AM

கொளத்துார், கொளத்துார், ஜி.கே.எம்., காலனி 42வது தெருவில், ஆறு மாதங்களுக்கு முன் 70 லட்சம் ரூபாய் செலவில், சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இப்பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக, புதிதாக அமைத்த சிமென்ட் சாலையை, குடிநீர் வாரியம் பெயர்த்து வருகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஒரு பகுதியில் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டம் சார்ந்த பணிகள் இருந்தால் அவற்றை முன்கூட்டியே தெரியப்படுத்தி, அத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். அதன் பின்னரே சாலை அமைக்க வேண்டும்.
அதிலும் சிமென்ட் சாலை அமைத்தால், ஐந்து ஆண்டுகளுக்கு தோண்டக்கூடாது. ஆனால் கொளத்துாரில், அதிகாரிகள் ஒருங்கிணைப்பின்றி சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதை தற்போது தோண்டி வருவதால், அவ்வழியே சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலை சேதம் குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கொளத்துாரில் பெரியார் நகர் மற்றும் ஜவஹர் நகரில் குடிநீர் வாரியம் சார்பில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இங்கெல்லாம் 1970களில் அமைக்கப்பட்ட குழாய்களே இருந்தன. அவை தற்போது மாற்றப்பட்டு வருகின்றன.
இதற்காக 35 கோடி ரூபாய் குடிநீர் வாரியம் ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் அமைத்த சாலை என்பதால், சாலை வெட்டு கட்டணம் இரண்டு மடங்கு வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.