/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் - கோவை வாராந்திர சிறப்பு ரயில்
/
தாம்பரம் - கோவை வாராந்திர சிறப்பு ரயில்
ADDED : அக் 09, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தாம்பரம் - கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து, வரும் 11, 18, 25, நவ., 1, 8, 15, 22, 29ம் தேதிகளில், மாலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:10 மணிக்கு கோவை செல்லும்
கோவையில் இருந்து, வரும் 13, 20, 27, நவ., 3, 10, 17, 24, டிச., 1ம் தேதிகளில், இரவு 11:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:30 மணிக்கு தாம்பரம் வரும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும். இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.