ADDED : நவ 19, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன், 50. இவருக்கு சொந்தமான, லோடு ஆட்டோவை, அதே பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தியுள்ளார்.
நேற்று அதிகாலை, 12:45 மணியளவில் ஆட்டோ தீப்பிடித்து எரிந்துள்ளது. சம்பவம் அறிந்து வந்த கண்ணன், தீயை அணைத்தார்.
அப்போது, ஆட்டோ அருகில், மொபைல்போன் ஒன்று கிடந்துள்ளது. சிறிது நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் வந்து, கண்ணன் கையில் இருந்த போனுக்கு அழைத்துள்ளார். சிறுவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், சிறுவனின் நண்பரான மற்றொரு 16 வயது சிறுவனும், அவரது நண்பர்களும் சேர்ந்து, ஆட்டோவை எரித்தது தெரிந்தது.
இதில் தொடர்புடைய அயனாவரத்தைச் சேர்ந்த தீபக், 20, மற்றும் ஐந்து சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

