/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குண்டும் குழியுமான ஆற்காடு சாலை
/
குண்டும் குழியுமான ஆற்காடு சாலை
ADDED : டிச 09, 2025 06:27 AM

விருகம்பாக்கம்: விருகம்பாக்கம் ஆற்காடு சாலை குண்டும் குழியுமாக மாறியதுடன், பறக்கும் துாசி, வா கன ஓ ட்டிகள் கண்ணை பதம் பார்த்து வருகிறது.
போரூர், வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைப்பது, ஆற்காடு சாலை.
இச்சாலையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் சாலையில் பறக்கும் துாசி, வாகன ஓட்டிகளின் கண்ணை பதம் பார்த்து வருகின் றன.
சமீபத்தில் பெய்த மழையில், விருகம்பாக்கம் ஆற்காடு சாலை குண்டும் குழியுமாக மாறி யுள்ளது.
குறிப்பாக, வேம்புலியம்மன் கோவில் முதல் அவிச்சி பள்ளி வரை உள்ள இரு வழிபாதையில் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.
எனவே, அடுத்த மழைக்கு முன் சாலையை சீர் செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

