/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெரிசலில் தவிக்கும் பேருந்து நிலையம் இடம் தேர்வாகியும் மாங்காடில் இழுபறி
/
நெரிசலில் தவிக்கும் பேருந்து நிலையம் இடம் தேர்வாகியும் மாங்காடில் இழுபறி
நெரிசலில் தவிக்கும் பேருந்து நிலையம் இடம் தேர்வாகியும் மாங்காடில் இழுபறி
நெரிசலில் தவிக்கும் பேருந்து நிலையம் இடம் தேர்வாகியும் மாங்காடில் இழுபறி
ADDED : பிப் 22, 2024 12:37 AM
குன்றத்துார், சென்னை அருகே மாங்காடு பகுதியில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில், நவக்கிரகங்களில் சுக்கிரன் தலமாக விளங்கும் வெள்ளீஸ்வரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில் ஆகியவை உள்ளன.
இக்கோவில்களுக்கு, பல்வேறு நகரங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
மாங்காடு சுற்றி, ஏராளமான குடியிருப்புகள், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள பலர் அரசு, தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், மாங்காடில் பேருந்து நிலையம் இல்லை. இதனால், பேருந்துகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
தாம்பரம், பல்லாவரம், குன்றத்துாரில் இருந்து பூந்தமல்லி, ஆவடி செல்லும் பேருந்துகள், சாலையோரம் பயணியரை இறக்கி, ஏற்றிச் செல்கின்றன.
இதனால், மாங்காடில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
இதற்கு தீர்வாக, குன்றத்துார் - -குமணன்சாவடி சாலை மாங்காடில், காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவானது.
ஹிந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்புதல் பெற்ற இந்நிலத்தில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து, நகராட்சி கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டது.
ஆனால் இதுவரை, அதற்கான பணிகள் துவங்காததால், நெரிசலில் சிக்கியும், பேருந்து நிலையத்தில் நிற்கு வசதியின்றி, மக்கள் அவதிப்படுகின்றனர். பணிகளை வேகப்படுத்த வேண்டும் என, வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மாங்காடு நகராட்சி தலைவர் சுமதி கூறுகையில், ''பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிலம் வரையறை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பணி முடிந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்,'' என்றார்.