/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ஆறு வழிச்சாலை நிலம் எடுப்பு பணி செலவு ரூ.1,000 கோடியாக உயர்வு'
/
'ஆறு வழிச்சாலை நிலம் எடுப்பு பணி செலவு ரூ.1,000 கோடியாக உயர்வு'
'ஆறு வழிச்சாலை நிலம் எடுப்பு பணி செலவு ரூ.1,000 கோடியாக உயர்வு'
'ஆறு வழிச்சாலை நிலம் எடுப்பு பணி செலவு ரூ.1,000 கோடியாக உயர்வு'
ADDED : ஜன 25, 2025 12:34 AM
கொளத்துார், ''திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான, ஆறு வழிச்சாலை நிலம் எடுப்பு பணிக்கான செலவு, 10 கோடி ரூபாயில் இருந்து, 1,000 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது,'' என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
கொளத்துார் தொகுதி, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், கூடுதலாக கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஹிந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பின், அமைச்சர் வேலு அளித்த பேட்டி:
கொளத்துார், பெரியார் நகரில் உள்ள பழைய மருத்துவமனை, 300 படுக்கைகள் கொண்டதாக புதுப்பிக்கப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு கோரிக்கையை ஏற்று, மருத்துவமனை மேம்பாட்டுக்கு, முதற்கட்டமாக, 55 கோடி ரூபாய்; இரண்டாம் கட்டமாக, 54.82 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 97 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த மாதம் 28ம் தேதி மருத்துவமனையை, முதல்வர் திறக்க உள்ளார்.
முதல்வர் எம்.எல்.ஏ.,வாக இருப்பதால், இத்தொகுதி புண்ணியம் பெற்றுள்ளது. இந்த மருத்துவமனையில் தற்போது, 2,000 புறநோயாளிகள் வருகின்றனர். புதிய கட்டடங்கள் திறந்தவுடன், 5,000 பேர் வருவர்.
வள்ளுவர் கோட்டம் சீரமைப்பு பணிகள், 60 நாட்களில் முடியும்.
திருவான்மியூர் முதல் அக்கரை வரை, ஆறு வழிச்சாலைக்கான நில எடுப்பு பணிகளுக்கு, 2009ல் 10 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டது. தற்போது, 1,000 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. நில எடுப்பு பணிகள், 98 சதவீதம் முடிந்துள்ளது. விரைவாக அனைத்து பணிகளும் முடிந்துவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

