/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேட்மின்டன் விளையாடிய ராணுவ அதிகாரி இறப்பு
/
பேட்மின்டன் விளையாடிய ராணுவ அதிகாரி இறப்பு
ADDED : பிப் 09, 2025 10:16 PM
சென்னை:கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான்சன்தாமஸ், 50; சென்னையில் தலைமைச் செயலகத்தில், முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் கர்னலாக பணிபுரிந்தார்.
சென்னை, தீவுத்திடல் அருகே, ராணுவ குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் மாலை, அண்ணா சாலை மன்றோ சிலை அருகே, ராணுவ மைதானத்தில் நண்பர்களுடன் பேட்மின்டன் விளையாடினார்.
அப்போது தண்ணீர் குடித்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். அவரின் நண்பர்கள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவனையில் அவரை சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதனையில், வரும் வழியில் ஜான்சன்தமாஸ் உயிர் பிரிந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதைனைக்கு பின் நேற்று, அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.