/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் கசிவால் வடபழனி பாலத்தில் மண் அரிப்பு வலுப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலை துறை தீவிரம்

ADDED : நவ 22, 2024 12:24 AM

வடபழனி,
வடபழனி 100 அடி சாலையில் கட்டப்பட்ட மேம்பாலம், 2016 முதல் பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலை வழியாக, புழலில் இருந்து வரும் குடிநீர் குழாய் செல்கிறது.
அதேபோல், கீழ்ப்பாக்கத்தில் இருந்து கே.கே., நகருக்கு குடிநீர் எடுத்து செல்ல, பல ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட குடிநீர் குழாயும் செல்கிறது.
கோயம்பேடு அருகே, கீழ்ப்பாக்கத்தில் இருந்து வரும் குழாயும், புழலில் இருந்து வரும் குழாயும் இணைக்கப்பட்டு, வடபழனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
சில நாட்களுக்கு முன், இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் கசிந்தது. இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில், வடபழனி தனியார் மருத்துவமனை அருகே, புது வால்வு அமைத்தனர்.
இந்நிலையில், வடபழனி மேம்பாலத்தின் கீழ் செல்லும் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிகிறது. இதனால், மேம்பாலத்தின் சாய்தள பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, மேம்பாலத்தின் சாய்தளத்தை வலுப்படுத்த 'க்ரூட்டிங்' முறையில் எம்.சாண்ட் மற்றும் சிமென்ட் கலவையை, மேம்பால சாய்தள தடுப்புச்சுவர் இடைவெளி வழியாக செலுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, மேம்பால சாய்தளத்தின் தடுப்புச்சுவர் அருகே வலை கட்டி, தடுப்புகள் அமைத்து, நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.