ADDED : ஜன 20, 2024 11:58 PM

சென்னை நடந்து வரும் புத்தக காட்சியில், 'மகிழ்ச்சி எனும் மாயநதி' என்ற தலைப்பில், பேச்சாளர் கவிதா ஜவஹர் பேசியதாவது:
நாம் வெளித்தோற்றத்தில் மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்கிறோம். ஆனால், இதயத்தில் மகிழ்ச்சி அற்றவர்களாக உள்ளோம்.
மனம் நிறைவில் தான் மகிழ்ச்சி உள்ளது. மற்றவர்களின் தேவை அறிந்து, அவர்கள் கேட்காத போதிலும், உதவி செய்யும்போது மனம் நிறையும். கடையெழு வள்ளல்களில் பாரி, பேகன் இருவரையும் இலக்கியம் அதிகமாகக் கொண்டாடக் காரணம் இது தான்.
அதேபோல, மகிழ்ச்சிக்கான சாவி புத்தகங்களில் உள்ளது. சில நேரங்களில், மகிழ்ச்சியை விலை கொடுத்தும் வாங்க நேரிடும். காரணம், புத்தகங்களை விலை கொடுத்து தானே வாங்குகிறோம்.
அதே வேளை யில், புத்தகங்களை வாங்கி, அதை வாசிக்காமல் வைத்திருப்பது, அந்த படைப்பாளிக்குச் செய்யும் துரோகம்.எதை இழந்திருக்கிறோம் என வருந்தாமல், எது நம்மிடம் மீதமிருக்கிறதோ அதை வைத்து, வாழ்க்கையை ரசிப்பதே மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் பேசினார்.

