/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ்காரரை தாக்கி சீருடையை கிழித்தவர் கைது
/
போலீஸ்காரரை தாக்கி சீருடையை கிழித்தவர் கைது
ADDED : டிச 25, 2024 12:23 AM
மதுரவாயல்,  மதுரவாயல் காவல் நிலைய குற்றப்பிரிவில் போலீஸ்காரர் சின்னதுரை. இவர், 22ம் தேதி இரவு, மதுரவாயல் ஓடைமா நகர் பாலம் அருகே, சப் - இன்ஸ்பெக்டருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
அப்போது, பைக்கில் வந்த இருவரை, சின்னதுரை தடுத்து நிறுத்தினார். பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபர், 'நான் யார் தெரியுமா' எனக் கேட்டு, பைக்கில் இருந்து இறங்கி, போலீஸ்காரரின் சீருடையை பிடித்து இழுத்து தாக்கினார்.
இதில், சின்னதுரையின் சீருடை கிழிந்தது. இதையடுத்து, எஸ்.ஐ., மற்றும் பகுதிவாசிகள் சேர்ந்து, அந்த நபரை பிடிக்க முயன்ற போது, மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, தப்பி சென்றார்.
இதுகுறித்து, மதுரவாயல் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து, போலீஸ்காரரை தாக்கிய மதுரவாயல் ஸ்ரீலட்சுமி நகர், சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மோகன், 38, என்பவரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், மோகன் பழைய குற்றவாளி என்பதும், அவர் மீது ஒரு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

