/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காணாமல் போன மேம்பால சுவர் பூங்கா வீணாகிப் போனது மக்களின் வரிப்பணம்
/
காணாமல் போன மேம்பால சுவர் பூங்கா வீணாகிப் போனது மக்களின் வரிப்பணம்
காணாமல் போன மேம்பால சுவர் பூங்கா வீணாகிப் போனது மக்களின் வரிப்பணம்
காணாமல் போன மேம்பால சுவர் பூங்கா வீணாகிப் போனது மக்களின் வரிப்பணம்
ADDED : செப் 27, 2024 12:42 AM

திருமங்கலம், பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த மேம்பால சுவர் பூங்காக்கள், போதிய பராமரிப்பின்றி விடப்பட்டதால், இருந்த இடமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகரை அழகுபடுத்தும் பணி, 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக, மேம்பாலங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் சுவர் பூங்கா அமைக்கப்பட்டன.
அவற்றிற்கு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து நீர் தெளித்து வந்தனர்.
அந்த வகையில், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேம்பாலத்தையும் மாநகராட்சியுடன் இணைந்து, பல லட்சம் ரூபாய் செலவில் அழகுபடுத்தும் பணிகளை மேற்கொண்டன.
அதன்படி, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட திருமங்கலம் மற்றும் அண்ணா வளைவு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைத் துறையின் மேம்பாலத் துண்களில் சுவர்கள் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
அவை பல ஆண்டுகளாக, போதிய பராமரிப்பின்றி மோசமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, பூங்காவில் செடிகள் இல்லை. துாண்கள் இடையே வைத்த செயற்கை நீரூற்றும் இயங்காமல் உள்ளது. மோசமான பராமரிப்பு காரணமாக, மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மேம்பாலங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த சுவர் பூங்காக்கள், தற்போது இருந்த இடமே தெரியாத அளவில் காணாமல் போயுள்ளன. ''திருமங்கலத்தில் மெட்ரோ பணிகளை காரணம் காட்டி, பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை; அண்ணா வளைவிலும் மோசமான நிலை தான்.
இதனால், மக்களின் வரிப்பணம் தான், செடியுடன் சேர்ந்து காய்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.