/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறியவர் பிடிபட்டார்
/
சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறியவர் பிடிபட்டார்
சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறியவர் பிடிபட்டார்
சிறுவனை பிச்சை எடுக்க வைத்து அத்துமீறியவர் பிடிபட்டார்
ADDED : செப் 25, 2025 12:40 AM
வில்லிவாக்கம்:சிறுவனை பிச்சை எடுக்க வைத்து, பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
ஐ.சி.எப்., ரயில்வேக்கு சொந்தமான இடத்தில், சிறுவன் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளான். இதை பார்த்த ரயில்வே போலீசார், சிறுவனை மீட்டு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வில்லிவாக்கத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் என்பதும், தாய், தந்தை பிரிந்த நிலையில் பாட்டி யின் ஆதரவில் வளர்ந்து வருவதும் தெரிய வந்தது.
சிறுவனை, வாலிபர் ஒருவர் கட்டாயப்படுத்தி, பிச்சை எடுக்க வைத்து, பல மாதங்களாக பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, குழந்தைகள் நல அலுவலர்கள், சிறுவனை வில்லி வாக்கம் அனைத்து மகளிர் போலீசில், நேற்று முன் தினம் ஒப்படைத்து புகார் அளித்தனர்.
போலீசார் விசாரித்து, சிறுவனிடம் அத்துமீறிய வில்லிவாக்கம், ஆதிநாயுடு தெருவைச் சேர்ந்த மேளம் அடிக்கும் தொழில் செய்யும் மணிகண்டன், 19 என்பவரை கைது செய்தனர். அவர் மீது, பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்கு பதிந்து, நேற்று சிறையில் அடைத்தனர்.