ADDED : டிச 25, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் மணிமாறன், 60. நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர், எஸ்.ஐ.,யை திடீரென ஆபாசமாக பேசி, தகராறு செய்துள்ளார். பின், தலைக்கவசத்தால் எஸ்.ஐ.,யை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்து, வாகன ஓட்டி தப்பிச்சென்றார். எஸ்.ஐ., அளித்த புகாரின்படி நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதில், மயிலாப்பூர் டிமாண்டி தெருவைச் சேர்ந்த மகின் கோஸ்கா, 26, எஸ்.ஐ., மீது தாக்குதல் நடத்தியது தெரிந்தது. அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

