/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நான்கு ஆண்டாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ள சாலை
/
நான்கு ஆண்டாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ள சாலை
நான்கு ஆண்டாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ள சாலை
நான்கு ஆண்டாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ள சாலை
ADDED : மே 20, 2025 01:51 AM

ஜல்லடியன்பேட்டை, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலையில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால், சோழிங்கநல்லுார் நோக்கி செல்ல, 3 கி.மீ., சுற்றி வரவேண்டியுள்ளது.
அதனால், பள்ளிக்கரணை, ஜல்லடியன்பேட்டை பகுதிவாசிகள் ஜல்லடியன்பேட்டை வீராத்தம்மன் கோவில் சாலையையே பயன்படுத்துகின்றனர்.
இச்சாலை, மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் சாலையை, 1.5 கி.மீட்டரிலேயே இணைக்கிறது. எனவே, இதில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
ஆனால், இச்சாலை கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி, குண்டும் குழியுமாக உள்ளது. மெட்ரோ பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
எனவே, முக்கிய இணைப்பு சாலையான இதை, விரைவில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள், வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.