/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாட்டின் அழுகிய சடலம் சாலையில் வீசப்பட்ட அவலம்
/
மாட்டின் அழுகிய சடலம் சாலையில் வீசப்பட்ட அவலம்
ADDED : அக் 25, 2025 08:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: சாலையில் வீசப்பட்ட அழுகிய நிலையிலான மாட்டின் சடலத்தை, மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட புழல், 31வது வார்டில் எம்.ஜி.ஆர்.,நகர் மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர், அழுகிய நிலையில் மாட்டின் சடலத்தை வீசி சென்றனர்.
இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து எம்.ஜி.ஆர்.,நகர் பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாட்டின் சடலத்தை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். மாட்டின் சடலத்தை வீசியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

