/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீனியர் டிவிஷன் கால்பந்து ஐ.சி.எப்., அணி அபாரம்
/
சீனியர் டிவிஷன் கால்பந்து ஐ.சி.எப்., அணி அபாரம்
ADDED : ஏப் 27, 2025 01:29 AM
சென்னை:சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான சீனியர் டிவிஷன் கால்பந்து லீக் போட்டி, சென்னை ஐ.சி.எப்., மைதானத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் ஐ.சி.எப்., அணி, ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணிகள் மோதின. போட்டியின் 10வது நிமிடத்தில் ஐ.சி.எப்., அணி வீரர் தேவராஜ் முதல் கோல் அடித்தார். இதனால், முதல் பாதியில் ஐ.சி.எப்., அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் முன்னணி பெற்றது.விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது பாதியில், போட்டியின் 64வது நிமிடத்தில் ஐ.சி.எப்., அணியின் ஜெய் கணேஷ் கோல் அடித்தார். அதன் பின், இரு அணிகளின் கோல் முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
ஆட்ட நேர முடிவில் ஐ.சி.எப் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக ஐ.சி.எப்., அணியின் ஜெய் கணேஷ் பாராட்டப்பட்டார்.

