ADDED : அக் 04, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல், மதுரவாயல் 144வது வார்டிலுள்ள ராஜிவ்காந்தி தெருவில், 46 வீடுகளும்; 145வது வார்டு நெற்குன்றம் என்.டி.படேல் சாலையில் 29 வீடுகளும், வண்டி பாட்டை நிலத்தில் அமைந்துள்ளன.
இப்பகுதியில், 40 அடியாக இருந்த சாலை, ஆக்கிரமிப்பால், 20 அடியாக சுருங்கியதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வருவாய் துறையினர் சில மாதங்களுக்கு முன் அளவீடு செய்ய வந்த போது, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பிச் சென்றனர்.
இதனால் நேற்று, போலீஸ் பாதுகாப்புடன் வந்த மதுரவாயல் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள், இடங்களை அளவீடு செய்தனர். அப்போது பகுதிவாசிகள் முற்றுகையிட்டதால், போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.
பின், அளவீடு பணியை அதிகாரிகள் முடித்தனர்.