/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அலையில் சிக்கி மாணவர் பலி இருவரை தேடும் பணி தீவிரம்
/
அலையில் சிக்கி மாணவர் பலி இருவரை தேடும் பணி தீவிரம்
அலையில் சிக்கி மாணவர் பலி இருவரை தேடும் பணி தீவிரம்
அலையில் சிக்கி மாணவர் பலி இருவரை தேடும் பணி தீவிரம்
ADDED : ஜன 28, 2024 12:47 AM

திருவொற்றியூர், வியாசர்பாடி, முத்து தெருவைச் சேர்ந்தவர் விஜய், 15; பிளஸ் 1 மாணவர். இவரது நண்பர்கள் பிளஸ் 2 மாணவரான சந்தோஷ், 16, ஷாம், 16, மற்றும் பி.வி. காலனியைச் சேர்ந்த புவனேஷ், 15.
நண்பர்கள் நால்வரும், நேற்று மாலை 4:00 மணியளவில், எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர், சுதந்திரபுரம் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அங்கு, குளித்து கொண்டிருந்த நிலையில், திடீரென தோன்றிய ராட்சத அலையில் சிக்கி, நால்வரும் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதில், விஜய் என்ற சிறுவனை மீனவர்கள் காப்பாற்றினர். மற்ற மூவரும் கடல் அலையில் சிக்கி மாயமாகினர்.
திருவொற்றியூர் போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள், மெரினா கடற்கரை நீச்சல் வீரர்களின் உதவியோடு, மூன்று பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இரவு 7:30 மணியளவில், சம்பவம் நடந்த இடம் அருகே துாண்டில் வளைவில் சந்தோஷ் என்பவரது உடல் சிக்கிக் கொண்டிருந்தது.
தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.