ADDED : ஏப் 25, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில், கே.ஜி., சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில், 30 வயது மதிக்தக்க பெண் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் நான்காவது மாடிக்கு மின் துாக்கியில் சென்றார்.
அப்போது, மின் துாக்கியில் பயணித்த அடையாளம் தெரியாத நபர், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
அப்பெண் கூச்சலிட்டு, மின் துாக்கியை நிறுத்தியதும், மர்மநபர் அங்கு இருந்து தப்பினார். இது குறித்து வானகரம் போலீசார் விசாரித்தனர்.
இதில், அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த உதயகிருஷ்ணன், 26, என்பவர், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.