/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : அக் 27, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கு, எஸ்.எஸ்.எல்.சி., முதல் பட்டப்படிப்பு வரை படித்து, வேலைவாய்ப்பு கிடைக்காமல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து காத்திருப்போர் விண்ணப்பிக்கலாம்.
கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். மாற்றுத்திறனாளிகள், கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளி சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடலாம்.
ஏற்கனவே உதவித்தொகை பெறும் பயனாளிகள், சுய உறுதி மொழி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

