/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வெளியே வந்ததும் கைவரிசை மீண்டும் சிறை சென்ற வாலிபர்
/
வெளியே வந்ததும் கைவரிசை மீண்டும் சிறை சென்ற வாலிபர்
வெளியே வந்ததும் கைவரிசை மீண்டும் சிறை சென்ற வாலிபர்
வெளியே வந்ததும் கைவரிசை மீண்டும் சிறை சென்ற வாலிபர்
ADDED : ஜூலை 05, 2025 11:58 PM

அம்பத்துார், அம்பத்துார், விஜயலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பகவான்தாஸ், 66. இவரது மனைவி ரூடா, 63. கடந்த மூன்றாம் தேதி காலை, வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றபோது, அவ்வழியாக 'பஜாஜ் பல்சர்' பைக்கில் வந்த வாலிபர், ரூடா அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பினார்.
இது குறித்து பகவான்தாஸ் கொடுத்த புகாரின்படி, அம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து, அம்பத்துார், முருகாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அஜய் என்கிற அஜித்குமார், 27, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அதில், குண்டாஸ் தண்டனை முடிந்து, கடந்தாண்டு மார்ச் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்த அஜித்குமார், அன்றைய தினமே தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு சிறை சென்றார். மீண்டும் தண்டனை காலம் முடிந்து, கடந்த 1ம் தேதி, சிறையில் இருந்து வெளியே வந்த அவர், 2ம் தேதி நள்ளிரவு மதுரவாயலில் 'பல்சர்' பைக்கை திருடி, திருமுல்லைவாயல், அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடம் இருந்து, பைக், மூன்று மொபைல் போன், கைப்பை, இரண்டரை சவரன் தங்க சங்கிலி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், நேற்று மாலை மீண்டும் சிறையில் அடைத்தனர்.