/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடந்து சென்றவரிடம் வழிப்பறி திருடர்கள் கைது
/
நடந்து சென்றவரிடம் வழிப்பறி திருடர்கள் கைது
ADDED : ஜூலை 28, 2025 02:19 AM
சென்னை:சென்னையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் சுல்பிகார் அலி, 52. இவர், திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள, பழைய இரும்பு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம், திருவல்லிக்கேணி லாயிட்ஸ் காலனி வழியாக வேலைக்கு செல்ல நடந்து சென்றுள்ளார்.
இவரை மர்ம நபர்கள் மூவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 1,100 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பி உள்ளனர்.
பிடிக்க முயன்ற நபர்கள் மீது கற்களை வீசி கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.  சம்பவம் குறித்து, சுல்பிகார்அலி, ஐஸ்ஹவுஸ் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
போலீசார் சம்பவ இடத்தில் உள்ள, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருவல்லிக்கேணி நெசவாளர் தெருவைச் சேர்ந்த திவாகரன், 23, ராயப்பேட்டை முத்தையா கார்டன் தெருவைச் சேர்ந்த குபேந்திரன், 23, ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் மூவரும், கடந்த, 18 மற்றும் 20ம் தேதிகளில் ராயப்பேட்டை மற்றும் திருவல்லிக்கேணி பகுதியில் அலுமினிய ஏணி மற்றும் புதிதாக கட்டப்படும் ஒரு வீட்டில், 8 கிலோ ஒயர்களை திருடியதும் தெரியவந்தது.

