/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய் வால்வு மட்டும் திருடும் திருமங்கலம் வாலிபர் கைது
/
குழாய் வால்வு மட்டும் திருடும் திருமங்கலம் வாலிபர் கைது
குழாய் வால்வு மட்டும் திருடும் திருமங்கலம் வாலிபர் கைது
குழாய் வால்வு மட்டும் திருடும் திருமங்கலம் வாலிபர் கைது
ADDED : பிப் 16, 2025 04:03 AM

திருமங்கலம்:திருமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர், ஏ.எப்., பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்தம், 84; மாநில கல்லுாரியில் ஓய்வு பெற்ற பேராசிரியர்.
நேற்று முன்தினம் இரவு 11:45 மணிக்கு, வீட்டிற்குள் யாரோ வருவது போல் சத்தம் கேட்டுள்ளது.
வீட்டின் கதவை விவேகானந்தம் திறந்து பார்த்தபோது, வாலிபர் ஒருவர் தடுப்பு சுவரை தாண்டி குதித்து ஓடுவது தெரிந்தது. இதுகுறித்து, திருமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் தலைமையில் தனிப்படை போலீசார், ஆய்வு செய்து, 24 மணி நேரத்தில் வில்லிவாக்கம், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த தமிழரசு, 24, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் தமிழரசு, வீடுகளில் நள்ளிரவு புகுந்து, தண்ணீர் குழாய்களின் இரும்பு மற்றும் பித்தளை வால்வுகளை மட்டுமே குறிவைத்து திருடுபவர் என்பது தெரிந்தது. அவ்வப்போது இதுபோல் திருடி, அதை விற்று மது குடிந்து வந்துள்ளார். 20க்கும் மேற்பட்ட வீடுகளில், தண்ணீர் குழாய் வால்வுகளை திருடியுள்ளதாக தெரிவித்த போலீசார், நேற்று இரவு, அவரை சிறையில் அடைத்தனர்.

