/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருநீர்மலை ரங்கநாதர் கோவில் நிலம்...அபகரிப்பு :குத்தகை இடத்தில் சாலை அமைத்து அராஜகம்
/
திருநீர்மலை ரங்கநாதர் கோவில் நிலம்...அபகரிப்பு :குத்தகை இடத்தில் சாலை அமைத்து அராஜகம்
திருநீர்மலை ரங்கநாதர் கோவில் நிலம்...அபகரிப்பு :குத்தகை இடத்தில் சாலை அமைத்து அராஜகம்
திருநீர்மலை ரங்கநாதர் கோவில் நிலம்...அபகரிப்பு :குத்தகை இடத்தில் சாலை அமைத்து அராஜகம்
ADDED : ஜூலை 20, 2025 01:00 AM

திருநீர்மலை:திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, 6.47 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் முறைகேடாக கட்டட இடிபாடுகளை கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. வீட்டுமனை அமைப்பதற்கு சாலை தேவை என்பதால், இந்த முறைகேடு நடந்து வருவதாக விவசாயிகள் மற்றும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் பழமைவாய்ந்த ரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான 156 ஏக்கர் நிலம், திருநீர்மலையைச் சுற்றி உள்ளது. இதில், 100 ஏக்கர் பரப்பளவு நிலத்தில், அப்பகுதியைச் சேர்ந்தோர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்கின்றனர். மற்ற இடங்கள், சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன.
திருநீர்மலை சாலையில், திருநீர்மலை பெரிய ஏரிக்கரை எதிரே, சர்வே எண்கள் 77, 79, 80, 82ல் அடங்கிய 6.47 ஏக்கர் நிலம், சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில், 500 அடி நீளத்திற்கு, 30 அடி அகலத்தில் கட்டடக் கழிவுகளை கொட்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, இரும்பு கேட் அமைப்பதற்கு இரு பில்லர்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் சாலை போடப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை, கோவில் நிலத்தை ஆட்டை போடும் முயற்சியே என, திருநீர்மலை விவசாயிகள் மற்றும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து, திருநீர்மலையைச் சேர்ந்த ஆர்.எஸ்.சுபாஷ், 63, என்பவர் கூறியதாவது:
கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, விவசாயம் தான் செய்ய வேண்டும். ஆனால், குத்தகைக்கு எடுத்துள்ளவரின் நிலம், கோவில் நிலத்திற்கு பின்புறம் உள்ளது. அந்த இடத்தில், வீட்டு மனைப்பிரிவு அமைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது.
இந்த நிலத்திற்கு, வேறு பகுதி வழியாக, 20 அடி சாலை உள்ளது. 20 அடி சாலையை வைத்து, வீட்டு மனை பிரிவுக்கு 'அப்ரூவல்' வாங்க முடியாது என்பதற்காக, கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில், 30 அடி சாலை அமைத்துள்ளனர். இந்த சாலையை காட்டி, அப்ரூவல் வாங்கி நிலத்தை விற்க முயற்சிக்கின்றனர்.
ஆரம்பத்திலேயே தடுத்து, போடப்பட்டுள்ள சாலையை அகற்றி, கோவில் நிலத்தை மீட்க வேண்டும். இது தொடர்பாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹிந்து அறநிலையத்துறை அதிகாரி, காஞ்சிபுரத்தில் உள்ள ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கண்ணெதிரே கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் தனிநபரின் செயல், இப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.