/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூர், துரைப்பாக்கம், வேளச்சேரி தீயணைப்பு நிலையங்களில் இட பற்றாக்குறை நவீன வாகனங்களை நிறுத்த வசதியின்றி தவிப்பு

ADDED : மே 27, 2025 12:20 AM

சென்னை, திருவான்மியூர் தீயணைப்பு நிலையம், 20 ஆண்டுக்கு மேலாக செயல்படுகிறது. இ.சி.ஆரில் தீ விபத்து நடந்தால், இங்கிருந்து தீயணைப்பு வாகனங்கள் செல்லும்.
இந்த நிலையம் குறுகிய இடத்தில் செயல்படுவதால், அதிநவீன வாகனங்கள் நிறுத்த முடியாமல், வீரர்கள் திணறுகின்றனர்.
துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையம், 2014 டிச., மாதம் முதல் செயல்படுகிறது. ஓ.எம்.ஆர்., உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் தீ விபத்து உள்ளிட்ட மீட்பு பணிகளுக்கு, இங்கிருந்து வாகனம் செல்கிறது.
இங்கு, 5,000 லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட ஒரு தீயணைப்பு வாகனம் உள்ளது. போதிய இடவசதி இல்லாததால், ஸ்கை லிப்ட் போன்ற நவீன தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், இந்த நிலையத்திற்கு வழங்கப்படவில்லை.
வேளச்சேரி தீயணைப்பு நிலையம், 2024ம் ஆண்டு துவங்கப்பட்டது. வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.
வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மனை எண்: 59ல், 4,057 சதுர அடி பரப்பு இடம், 1992ம் ஆண்டு, தீயணைப்பு நிலையம் கட்ட ஒதுக்கப்பட்டது.
கடந்த, 2015ம் ஆண்டு, 20 லட்சம் ரூபாயை வீட்டுவசதி வாரியத்திற்கு செலுத்தி, தீயணைப்புத்துறை இடத்தை, தங்கள் துறை பெயரில் வாங்கியது. இருந்தும், அதில் தீயணைப்பு நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
காலியாக உள்ளதால், இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்கின்றனர். மூன்று தீயணைப்பு நிலையங்களும் முக்கிய இடத்தில் உள்ளதால், நவீன தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
அதற்கு, நிர்ணயிக்கப்பட்ட பரப்புடன் சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:
திருவான்மியூர், வேளச்சேரி தீயணைப்பு நிலையங்கள் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
துரைப்பாக்கத்திற்கு இடம் கிடைக்கவில்லை. இடம் தேர்வான பின், அங்கும் தீயணைப்பு நிலையம் கட்டப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.