/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவாரூர் திருடன் ஏர்போர்டில் கைது
/
திருவாரூர் திருடன் ஏர்போர்டில் கைது
ADDED : ஏப் 03, 2025 12:33 AM
சென்னை,
ஐக்கிய அரசு நாடுகளில் ஒன்றான ஷார்ஜாவில் இருந்து சென்னைக்கு, நேற்று முன்தினம் விமானம் வந்தது. அதில் வந்த பயணியரின் பாஸ்போர்ட் விபரங்களை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர்.
இதில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்த அரவிந்த், 24, என்பவரின் பாஸ்போர்ட் ஆவணங்களை, கணினியில் சோதனை செய்தபோது, அவர் மீது திருட்டு வழக்கு இருப்பது தெரிந்தது.
கடந்த 2021ல் நடந்த திருட்டு வழக்கு சம்பந்தமாக, குடவாசல் போலீசார் அவரை தேடிய நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அனைத்து விமான நிலையங்களிலும் அவர் குறித்த தகவலுடன், 'லுக் அவுட் சர்குலர்' நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரிகள் அரவிந்தை பிடித்து, குடவாசல் குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படைக்கு தகவல் அளித்தனர். அவர்கள், நேற்று காலை சென்னை வந்து, குற்றவாளியை அழைத்துச் சென்றனர்.

