/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.15 லட்சம் மதிப்பு வாகனத்தை ஓரங்கட்டி வீணடிக்கும் 'தாட்கோ'
/
ரூ.15 லட்சம் மதிப்பு வாகனத்தை ஓரங்கட்டி வீணடிக்கும் 'தாட்கோ'
ரூ.15 லட்சம் மதிப்பு வாகனத்தை ஓரங்கட்டி வீணடிக்கும் 'தாட்கோ'
ரூ.15 லட்சம் மதிப்பு வாகனத்தை ஓரங்கட்டி வீணடிக்கும் 'தாட்கோ'
ADDED : ஆக 28, 2025 12:32 AM

சென்னை, பழங்குடியினருக்காக அரசு வழங்கிய, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான டீ, சிற்றுண்டி விற்பனைக்கான வாகனம், யாருக்கும் வழங்கப்படாமல் நான்கு மாதங்களாக, தாட்கோ அதிகாரிகளால் ஓரங்கட்டி வீணடிக்கப்படுகிறது.
தாட்கோ வாயிலாக, பட்டியல் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் பொருளாதார மேம்பாட்டிற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தமிழக அரசின் தொழில் முனைவு திட்டத்தின் கீழ், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள், குடும்பமாக தொழில் செய்யும் வகையில், நடப்பாண்டு துவக்கத்தில், டீ மற்றும் சிற்றுண்டி விற்பனை செய்யும் இரண்டு வாகனங்கள், தாட்கோவிற்கு வழங்கப்பட்டது.
ஒரு வாகனம், வண்டலுாரை சேர்ந்த பயனாளிக்கு வழங்கப்பட்ட நிலையில், மற்றொரு வாகனம் யாருக்கும் வழங்கப்படவில்லை.
இதனால், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம், நான்கு மாதங்களாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள தாட்கோ தலைமை அலுவலகம் முன் ஓரம் கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பட்டியல் சமூகத்தினர் சிலர் கூறியதாவது:
சென்னையில் மட்டும் வாகனத்தை இயக்க வேண்டும் என, அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில், நீலகிரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தான் பழங்குடியினர் அதிகம் உள்ளோம். சென்னையில் எண்ணிக்கை குறைவு.
எனவே, அதிகாரிகள் சென்னையில் மட்டும் வாகனத்தை இயக்க வேண்டும் என்ற, நிபந்தனையை நீக்கி, தகுதியான நபரை தேர்வு செய்து வழங்க வேண்டும்; அரசின் பணத்தை வீணடிக்ககூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தாட்கோ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இரண்டு வாகனங்களில் ஒன்று, வண்டலுார் பயனாளிக்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தை, சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் இயக்க அரசிடம் அனுமதி பெற்றுள்ளோம்.
விருப்பம் உள்ள பழங்குடியினர், குடும்பமாக விண்ணப்பித்தால், அவர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து வாகனம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.