/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆன்லைன் முதலீடு எனக்கூறி ரூ.3.40 கோடி சுருட்டிய மூவர் கைது
/
ஆன்லைன் முதலீடு எனக்கூறி ரூ.3.40 கோடி சுருட்டிய மூவர் கைது
ஆன்லைன் முதலீடு எனக்கூறி ரூ.3.40 கோடி சுருட்டிய மூவர் கைது
ஆன்லைன் முதலீடு எனக்கூறி ரூ.3.40 கோடி சுருட்டிய மூவர் கைது
ADDED : டிச 27, 2025 05:24 AM

சென்னை: ஆன் லைன் முதலீடு எனக்கூறி ஏமாற்றி, 3.40 கோடி ரூபாய் மோசடி செய்த, பெண்கள் உட்பட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாதன், 68. இவர், கடந்த ஜூலை மாதம், ஆன்லைன் முதலீடு தொட ர்பான வாட்ஸாப் குழுவில் இணைந்துள்ளார்.
அந்த குழுவில் இருந்த சிலரது ஆலோசனையின்படி, தன் மொபைல் போனில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அதில், 3.40 கோடி ரூபாயை, 13 வெவ்வேறு வங்கி கணக் குகளுக்கு அனுப்பியு ள்ளார்.
பின், முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டபோது, அந்த மொபைல் செயலி முழுதும் முடங்கியது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரித்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த பா லசுப்ரமணியன், 51, என்பவரை, நவ., 22ம் தேதி கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்தவர்களை தேடி வந்த நிலையில், துாத்துக்குடி மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த முருகேஷ், 49, எப்சி, 35, பஞ்சவர்ண ம், 33, ஆகிய மூவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இ வர்கள், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் சிலரது வங்கி கணக்குகளில் 'டிபாசிட்' செய்யப்பட்ட புகார்தாரரின் பணத்தை, காசோலை வாயிலாக, பாலசுப்ரமணியனுக்கு எடுத்துக் கொடுத்து, அதற்கு கமிஷன் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

