/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாயின் 2வது கணவருக்கு வெட்டு 17 வயது மகன் உட்பட மூவர் கைது
/
தாயின் 2வது கணவருக்கு வெட்டு 17 வயது மகன் உட்பட மூவர் கைது
தாயின் 2வது கணவருக்கு வெட்டு 17 வயது மகன் உட்பட மூவர் கைது
தாயின் 2வது கணவருக்கு வெட்டு 17 வயது மகன் உட்பட மூவர் கைது
ADDED : நவ 20, 2025 03:13 AM
கொரட்டூர்: கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி, 39. இவருக்கு மகன், மகள் உள்ளனர். இவரது மனைவி அனிதா, சில மாதங்களுக்கு முன், அதே பகுதியைச் பகுதியைச் சேர்ந்த தாஸ், 35, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து, அவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ரவியின் 18 வயது மகள், உடல்நலக்குறைவால், கடந்த 17ம் தேதி உயிரிழந்தார். மகளின் உடலை காண, அனிதா, அவரது இரண்டாவது கணவர் தாஸுடன், முதல் கணவர் ரவியின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
அப்போது, அவர்களுக்கும், முதல் கணவர் ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தாஸ், ரவியை தள்ளிவிட்டுள்ளார்.
இதை கண்ட ரவியின் 17 வயது மகன் மற்றும் அவரது நண்பர்கள், தாஸை சரமாரியாக தாக்கி, கத்தியால் வெட்டியுள்ளனர். இதில், தாஸின் தலை, முகம் உட்பட, பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
தாஸை அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, தாஸுக்கு, 20 தையல்கள் போடப்பட்டுள்ளன. மருத்துவமனை அளித்த தகவலின்படி, கொரட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், தாஸை தாக்கிய, ரவியின் 17 வயது மகன் மற்றும் அவரது நண்பர்களான, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், 20, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வசிம்கான், 22, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ரவி உட்பட மூவரை போலீசார் தேடுகின்றனர்.

