/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூவர் கூடைப்பந்து மீண்டும் ஒத்திவைப்பு
/
மூவர் கூடைப்பந்து மீண்டும் ஒத்திவைப்பு
ADDED : டிச 05, 2025 06:37 AM
சென்னை: மூவர் கூடைப்பந்து போட்டி, மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு ஆதரவில், வெளிநாட்டு அகாடமியான என்.பி.ஏ., சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான 3 x 3 எனும், மூவர் கூடைப்பந்து போட்டி நடத்தப்பட உள்ளது.
சென்னை, மும்பை, டில்லி, பெங்களூரு ஆகிய நான்கு இடங்களில் போட்டி நடக்க இருந்தது. முதற்கட்டமாக, கடந்த 1ம் தேதி, நுங்கம்பாக்கத்தில் துவங்குவதாக அறிவித்திருந்தது. தொடர் மழையால், இருமுறை ஒத்திவைக்கப்பட்ட போட்டி, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் 14 வயதுக்கு உட்பட்ட இருபாலரிலும், மொத்தம் 100 பள்ளிகள் பங்கேற்கின்றன. போட்டியில் தேர்வாகும் சிறந்த வீரர் - வீராங்கனையருக்கு, அகடாமி சார்பில் பயிற்சி அளித்து சர்வதேச வீரர்களாக உருவாக்கப்பட உள்ளனர்.

