/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரை
/
மாநகராட்சி வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் தீக்கிரை
ADDED : ஜன 17, 2024 12:36 AM

ஆவடி, குப்பை கழிவுகள் எரிந்த சம்பவத்தில், குப்பை அகற்றும் மாநகராட்சி வாகனம் உட்பட, மூன்று வாகனங்கள் தீக்கிரையாகின.
சென்னை ஆவடி, பெரியார் நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அகற்றும், ‛டாட்டா ஏஸ்' வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று மதியம், 3 மணி அளவில், அங்கு குவிந்திருந்த குப்பை கழிவில் தீ பிடித்து எரிந்தது. அப்போது அங்கிருந்த மாநகராட்சி வாகனம் மற்றும் தனியாருக்கு சொந்தமான 2 வாகனங்கள் உட்பட, 3 வாகனங்கள் தீக்கிரையாகின. தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வாகனங்கள் முழுமையாக சேதமடைந்தன. இது குறித்து, ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

