/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் மினர்வா அணி அதிரடி வெற்றி
/
டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் மினர்வா அணி அதிரடி வெற்றி
டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் மினர்வா அணி அதிரடி வெற்றி
டி.என்.சி.ஏ., 'லீக்' கிரிக்கெட் மினர்வா அணி அதிரடி வெற்றி
ADDED : ஏப் 07, 2025 02:10 AM

சென்னை:டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், மாநிலம் முழுதும், 2024 - 25ம் ஆண்டிற்கான, 'லீக்' கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
கல்லுாரிகள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு கிரிக்கெட் குழுவின் அணிகள் பங்கேற்றுள்ளன.
மண்டலம் மற்றும் பகுதி வாரியாக அணிகள் பிரிக்கப்பட்டு, 50 மற்றும் 30 ஓவர் அடிப்படையில், போட்டிகள் நடக்கின்றன.
தரமணி மத்திய பாலிடெக்னிக் மைதானத்தில், நேற்று காலை நடந்த போட்டியில், 'பி' மண்டலம், ஆறாவது பிரிவில் இடம் பெற்றுள்ள எம்.எப்.எல்., அணியும், மினர்வா கிரிக்கெட் குழு அணியும் மோதின.
முதலில் களமிறங்கிய எம்.எப்.எல்., அணி, 29.5 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக, அந்த அணியின் வீரர் சீனிவாசன் 50 ரன்கள் எடுத்தார். மினர்வா அணியின் மகேஷ், 19 ரன் விட்டுக்கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார்.
சவாலான இலக்குடன் அடுத்து களமிறங்கிய மினர்வா அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான மைத்ரேஷ், நரேஷ் ஆகிய இருவரும், நம்பிக்கையுடன் பந்துகளை எதிர்கொண்டு, ரன்களை குவித்தனர்.
இதனால் மினர்வா அணி 24.1 ஓவரில், நான்கு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மைத்ரேஷ் 60 ரன்களும், நரேஷ் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும் எடுத்தனர்.
ஆட்ட நாயகனாக மினர்வா அணியின் பந்து வீச்சாளர் மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற 'லீக்' போட்டிகள், சென்னையின் பல மைதானங்களில் நடக்கின்றன.

