/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பேசின்பால வாகன நெரிசலுக்கு தீர்வு காண மூலக்கொத்தளத்தில் போக்குவரத்து மாற்றம்
/
பேசின்பால வாகன நெரிசலுக்கு தீர்வு காண மூலக்கொத்தளத்தில் போக்குவரத்து மாற்றம்
பேசின்பால வாகன நெரிசலுக்கு தீர்வு காண மூலக்கொத்தளத்தில் போக்குவரத்து மாற்றம்
பேசின்பால வாகன நெரிசலுக்கு தீர்வு காண மூலக்கொத்தளத்தில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஜூலை 27, 2025 12:23 AM

மூலக்கொத்தளம், பேசின்பாலத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காண, மூலக்கொத்தளம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, ஒரு கி.மீ., துாரத்தில் வால்டாக்ஸ் சாலையில் பழமையான யானைக்கவுனி மேம்பாலம் உள்ளது. 1933ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம், சிதிலமடைந்ததால் 2016ல் மூடப்பட்டது; 2020ல் பாலம் இடித்து அகற்றப்பட்டது.
அதே இடத்தில் 2020 ஆகஸ்ட் மாதம் 79.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மேம்பால பணிகள் துவக்கப்பட்டன. பணிகள் முடிந்து, 2024 மார்ச் மாதம் திறக்கப்பட்டது. மேம்பாலம் திறந்து ஓராண்டாகியும், போக்குவரத்து மாற்றம் செய்யப்படவில்லை.
இதனால், மாற்றுப்பாதையில் இயக்கப்படும் வாகனங்கள், மூலக்கொத்தளம் வழியாக ஒருவழி பாதையில் சென்றதால், காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாணவர்கள், அலுவலகம் செல்வோர் கடும் அவதியடைந்தனர்.
மூலக்கொத்தளம் ஜங்ஷன் துவங்கி வியாசர்பாடி பாலம் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாக மாறியது. இது குறித்து வாகன ஓட்டிகளின் புகார்களை தொடர்ந்து, போக்குவரத்து மா ற்றம் செய்யப்பட்டுள்ளது.
வியாசர்பாடி, மின்ட், வால்டாக்ஸ் சாலை, இருவழி சாலையாக மாற்றப்பட்டது. இது மேலும் நெரிசலை ஏற்படுத்தவே, இரண்டு மணி நேரத்திலேயே, மீண்டும் பழையபடி ஒருவழிசாலையாக மாற்றப்பட்டது.
தற்போது, போக்குவரத்து போலீசாரின் கண்காணிப்பில், காலையில் ஒருவழி சாலையாகவும், மாலையில் இருவழி சாலையாகவும் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
வியாசர்பாடியில் இருந்து தங்கசாலை நோக்கி வரும் வாகனங்கள் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 வரை, பழைய முறைப்படி ஒருவழி பாதையாகவும்; மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, மூலக்கொத்தளம் சந்திப்பில் புதிய முறைப்படி இருவழி பாதையாகவும் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, மூலக்கொத்தளம் சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பேசின் பாலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். - போக்குவரத்து போலீசார்.