/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1 லட்சம் சம்பளத்தில் நிபுணர்களை தேடுகிறது போக்குவரத்து காவல்துறை
/
ரூ.1 லட்சம் சம்பளத்தில் நிபுணர்களை தேடுகிறது போக்குவரத்து காவல்துறை
ரூ.1 லட்சம் சம்பளத்தில் நிபுணர்களை தேடுகிறது போக்குவரத்து காவல்துறை
ரூ.1 லட்சம் சம்பளத்தில் நிபுணர்களை தேடுகிறது போக்குவரத்து காவல்துறை
ADDED : நவ 10, 2025 01:32 AM
சென்னை: சென்னையில் போக்குவரத்து சார்ந்த திட்டமிடல் பணிகளில் ஈடுபட, மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில், போக்குவரத்து பொறியாளரை, காவல் துறை நியமிக்க உள்ளது.
சென்னையில், ஏற்கனவே இருக்கும் சாலைகளை அகலப்படுத்துவது, மேம்பாலம் அமைப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்துவது சவாலாக உள்ளது.
தேவையான நிலங்களை கையகப்படுத்த முடியாமல், பல திட்டங்கள் கைவிடப்பட்டு உள்ளன.
இருப்பினும், அதிக உயரமான குடியிருப்புகள், அலுவலக, வணிக வளாகங்கள், மால்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வாகனம் ஓட்டுவது கடினமான பணியாகிவிட்டது.
இதில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது என்றால், குறிப்பிட்ட வழித்தடங்களை ஒருவழி பாதையாக்குவது மட்டுமே, பல ஆண்டுகளாக தீர்வாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நகரில் போக்குவரத்தை முறைப்படுத்துவது, கண்காணிப்பது, அது சார்ந்த திட்டங்களை தயாரிப்பது ஆகியவற்றில், போக்குவரத்து பொறியாளர்களை பயன்படுத்த காவல் துறை மு டிவு செய்துள்ளது.
இதற்காக, தற்காலிக அடிப்படையில், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளத்தில், இரண்டு போக்குவரத்து பெறியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை போக்குவரத்து காவல் துறை துவக்கி உள்ளது .
இது தொடர்பான, தகுதியான நபர்களை பரிந்துரைக்குமாறு, அண்ணா பல்கலை, சென்னை ஐ.ஐ.டி., - எஸ்.எஸ்.என்., பல்கலை, வி.ஐ.டி., பல்கலை ஆகியவற்றுக்கு, போக்குவரத்து காவல் துறை கூடுதல் கமிஷனர் ஜி.கார்த்திகேயன், கடிதம் எழுதி உள்ளார்.

