/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிவேகமாக சென்ற கார் மோதி போக்குவரத்து காவலர் படுகாயம்
/
அதிவேகமாக சென்ற கார் மோதி போக்குவரத்து காவலர் படுகாயம்
அதிவேகமாக சென்ற கார் மோதி போக்குவரத்து காவலர் படுகாயம்
அதிவேகமாக சென்ற கார் மோதி போக்குவரத்து காவலர் படுகாயம்
ADDED : நவ 09, 2024 12:46 AM

சென்னை, அதிவேகமாக வந்த கார் மோதியதில், படுகாயமடைந்த போக்குவரத்து காவலர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றுபர் அழகு குமார், 28. நேற்று காலை, 9:00 மணியளவில், தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள, 'யு டர்ன்' பகுதியில், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, நந்தனத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி, அதிவேகமாக வந்த கார், யு டர்ன் வளைவில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகளில் இடித்ததுடன், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த காவலர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில், இரு கால்களிலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரிந்தது. பின், மேல் சிகிச்சைக்காக, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து ஏற்படுத்திய பல்லாவரத்தை சேர்ந்த கஜேந்திர பாபு, 57 என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இவர், சி.பி.சி.எல்., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.