/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டில்லி பூங்கா ஊழியர்களுக்கு வண்டலுாரில் பயிற்சி
/
டில்லி பூங்கா ஊழியர்களுக்கு வண்டலுாரில் பயிற்சி
ADDED : மார் 16, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், டில்லி தேசிய பூங்காவிலங்கு பராமரிப்பாளர்கள் 30 பேருக்கு சென்னை வண்டலுார் உயிரியல் பூங்கா சார்பில், 15 நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
முதல் நாள் பயிற்சி நேற்று துவங்கியது. இதுபோன்ற ஒரு பயிற்சியை, வண்டலுார் பூங்கா நிர்வாகம் அளிப்பது, இதுவே முதல்முறை.
வன விலங்குகளை பிடித்தல், கையாளும் முறை, தீவனம் வினியோகம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படும்.
புலிகட், வேடந்தாங்கல், கிண்டி பூங்கா, பாம்பு பண்ணை ஆகிய இடங்களிலும், இவர்கள் களப்பணி மேற்கொள்ள உள்ளனர்.

