/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மன அழுத்தம் குறைக்க போலீசாருக்கு பயிற்சி
/
மன அழுத்தம் குறைக்க போலீசாருக்கு பயிற்சி
ADDED : ஜன 24, 2024 12:47 AM

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின் படி, காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்த பயிற்சி முகாமை, துணை கமிஷனர் மணிவண்ணன் துவக்கி வைத்தார்.
இந்திய விமானப்படை ஓய்வு அதிகாரி உன்னி நாயர் பயிற்சி வகுப்பை எடுத்தார்.
காவல் துறையில் உள்ளவர்கள் மன அழுத்தத்தை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பயிற்சி பட்டறை வகுப்பில் ஆய்வாளர்கள், எஸ்.ஐ.,க்கள் என, 50 பேர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக, துணை கமிஷனர் சீனிவாசன், பயிற்சியாளர் உன்னி நாயருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

