/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூவத்தில் கட்டட கழிவு முழுதும் அகற்றம் ஆணைய அறிக்கையை ஏற்றது தீர்ப்பாயம்
/
கூவத்தில் கட்டட கழிவு முழுதும் அகற்றம் ஆணைய அறிக்கையை ஏற்றது தீர்ப்பாயம்
கூவத்தில் கட்டட கழிவு முழுதும் அகற்றம் ஆணைய அறிக்கையை ஏற்றது தீர்ப்பாயம்
கூவத்தில் கட்டட கழிவு முழுதும் அகற்றம் ஆணைய அறிக்கையை ஏற்றது தீர்ப்பாயம்
ADDED : ஜன 22, 2025 12:51 AM
சென்னை,
கூவத்தில் கொட்டப்பட்ட கட்டட கழிவு முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக, தேசிய நெடுஞ்சாலைய ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை ஏற்று, வழக்கை, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் முடித்து வைத்துள்ளது.
சென்னை அமைந்தகரை காவல் நிலையம் பின்புறம் ஓடும் கூவம் ஆற்றின் இருபுறங்களிலும், குப்பை மற்றும் கட்டட கழிவு அதிக அளவில் கொட்டப்பட்டு உள்ளதாக, கடந்த மே 9ல்,
நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
'சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பால சாலை பணிகளுக்காக, கூவம் ஆற்றில் கட்டுமான கழிவு கொட்டப்பட்டு உள்ளது. பருவமழைக்கு முன் அதை அகற்றி விடுவோம்' என்று, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீர்ப்பாயத்தில் தெரிவித்தது.
கடந்த அக்., 3ல் இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், 'கழிவை முழுமையாக அகற்ற வேண்டும். இல்லையேல் அபராதம் விதிக்கப்படும்' என்று எச்சரித்தது.
இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பு:
சென்னை துறைமுகம் -- மதுரவாயல் இரண்டடுக்கு மேம்பால சாலை பணிக்காக, கூவம் ஆற்றில், 89 இடங்களில் கொட்டப்பட்ட கட்டட கழிவை முழுதும் அகற்றி விட்டோம். அதற்கான புகைப்படங்களையும் ஆணையம் சமர்ப்பித்துள்ளது.
எனவே, இதில் புதிய உத்தரவு பிறப்பிக்க எதுவும் இல்லை. தற்போதைய நிலையை நீர்வளத்துறை பராமரிக்க வேண்டும். குப்பை கொட்டப்படாமல் இருக்க கடுமையான கண்காணிப்பை நீர்வளத்துறை மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க முடியும். கட்டுமான பணிக்கான பொருட்கள், கூவம் ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டால், வேலை முடிந்ததும் உடனுக்குடன் அகற்ற வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.