/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காக்கா ஆழியை அகற்ற ரூ.56 கோடி ஒதுக்கீடு எண்ணுார் துறைமுகம் ஒத்துழைக்க தீர்ப்பாயம் உத்தரவு
/
காக்கா ஆழியை அகற்ற ரூ.56 கோடி ஒதுக்கீடு எண்ணுார் துறைமுகம் ஒத்துழைக்க தீர்ப்பாயம் உத்தரவு
காக்கா ஆழியை அகற்ற ரூ.56 கோடி ஒதுக்கீடு எண்ணுார் துறைமுகம் ஒத்துழைக்க தீர்ப்பாயம் உத்தரவு
காக்கா ஆழியை அகற்ற ரூ.56 கோடி ஒதுக்கீடு எண்ணுார் துறைமுகம் ஒத்துழைக்க தீர்ப்பாயம் உத்தரவு
ADDED : நவ 29, 2025 03:29 AM
சென்னை: 'காக்கா ஆழி'யை அகற்றுவதற்காக தமிழக அரசு, 56.50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயத்தில், குமரேசன் சூளுரன் என்பவர் தாக்கல் செய்த மனு:
சென்னை, எண்ணுார் நீர்நிலைகள் மற்றும் கடலில், தென் அமெரிக்க மஸ்ஸல் எனப்படும், 'காக்கா ஆழி' அதிகம் பரவியுள்ளது.
இவை வெளியிடும் துர்நாற்றம் உடைய கசடுகளால் கடல் உயிரிகள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவற்றை அழிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 'பருவமழை துவங்கும் முன், காக்கா ஆழியை அகற்ற வேண்டும். தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'நீர்நிலைகளில் காக்கா ஆழி மேலும் பரவுவதை தடுக்கும் முயற்சிகளை, நீர்வள பாதுகாப்பு மற்றும் நதி மறுசீரமைப்பு கழகம் துவங்கியுள்ளது.
'இதற்காக தமிழக அரசு 56.50 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. நிர்வாக ஒப்புதல் கிடைத்ததும் பணிகள் துவங்கும்' என, தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
காக்கா ஆழியை அகற்ற தேவையான இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க தேவையான நிதியை தமிழக அரசு உடனே விடுவிக்க வேண்டும். காக்கா ஆழி அதிகமாக இருக்கும் பகுதிகளில், முதலில் பணியை துவங்க வேண்டும்.
காக்கா ஆழியை அகற்றும் நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள, அரசு அதிகாரிகளுக்கு, எண்ணுார் துறைமுக அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் டிச., 24ல் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

