/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரும்பாக்கம் தொல்லியல் தளத்தில் குப்பை கிடங்கு ஏ.எஸ்.ஐ.,யிடம் அறிக்கை கேட்கும் தீர்ப்பாயம்
/
பெரும்பாக்கம் தொல்லியல் தளத்தில் குப்பை கிடங்கு ஏ.எஸ்.ஐ.,யிடம் அறிக்கை கேட்கும் தீர்ப்பாயம்
பெரும்பாக்கம் தொல்லியல் தளத்தில் குப்பை கிடங்கு ஏ.எஸ்.ஐ.,யிடம் அறிக்கை கேட்கும் தீர்ப்பாயம்
பெரும்பாக்கம் தொல்லியல் தளத்தில் குப்பை கிடங்கு ஏ.எஸ்.ஐ.,யிடம் அறிக்கை கேட்கும் தீர்ப்பாயம்
ADDED : நவ 14, 2025 02:34 AM
சென்னை: 'பெரும்பாக்கம் பெருங்கற்கால சின்னங்கள் உள்ள இடத்தில், குப்பை கிடங்கு அமைக்கப்படுவது குறித்து, ஏ.எஸ்.ஐ., எனப்படும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, இரண்டு வாரங் களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, பெரும் பாக்கம் ஊராட்சியில், பெருங்கற்கால தொல்லியல் சின்னங்கள் உள்ள இடத்தில், குப்பை கிடங்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு, பல ஏக்கர் நிலங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதனால், அங்குள்ள பெருங்கற்கால தொல்லியல் சின்னங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, கடந்த ஜனவரியில் நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்த, தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி ஷியோகுமார் சிங், நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சியில், பெருங்கற்கால தொல்லியல் சின்னங்கள் உள்ள இடத்தை, குப்பை கிடங்காக மாற்றும் பிரச்னை தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.
பெருங்கற்கால சின்னங்களையும், தொல்லியல் தளங்களையும் பாதுகாக்க வேண்டியது, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் கடமை.
எனவே, பெரும்பாக்கம் தொல்லியல் தளத்தில் குப்பை கிடங்கு அமைப்பது குறித்து, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு வாரங்களுக்குள், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் ஜனவரி 13ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

