/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் வடம் பழுது பார்க்கும் பணி 3 வாரமாக நடப்பதால் அவதி
/
மின் வடம் பழுது பார்க்கும் பணி 3 வாரமாக நடப்பதால் அவதி
மின் வடம் பழுது பார்க்கும் பணி 3 வாரமாக நடப்பதால் அவதி
மின் வடம் பழுது பார்க்கும் பணி 3 வாரமாக நடப்பதால் அவதி
ADDED : ஏப் 23, 2025 12:28 AM

ஆவடி, ஆவடி அடுத்த அண்ணனுார் 60 அடி சாலை, சிவசக்தி நகர் 51வது தெருவில், குடிநீர் குழாய் பதிக்கும் பணியை, நான்கு வாரங்களுக்கு முன், குடிநீர் வாரியம் மேற்கொண்டது.
இப்பணிக்காக பள்ளம் தோண்டியபோது, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட 230 கி.வா., மின் வடம் சேதமடைந்தது.
இதை சீரமைக்கும் பணியை, மின் வாரிய ஊழியர்கள் மூன்று வாரங்களாக செய்வதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அண்ணனுார் பகுதிவாசிகள் கூறியதாவது:
ஆவடி அடுத்த அண்ணனுார் 60 அடி சாலையில் புதைக்கப்பட்ட மின்வடம், குடிநீர் வாரிய பணியால் சேதமடைந்தது.
இதை பழுது பார்க்கும் பணி, மூன்று வாரங்களாக நடந்து வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளதால், சாலை சுருங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே சாலை குண்டும் குழியுமாக உள்ள நிலையில், பள்ளத்தைச் சுற்றி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் பிளாஸ்டிக் தடுப்பு மட்டும் வைத்துள்ளதால், வாகன ஓட்டிகள் இரவில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மின் வாரிய ஊழியர்கள், பழுது பார்ப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மின் வடம் சரி செய்யும் பணி முடிந்துவிட்டது. இரண்டு நாட்களில் பள்ளம் மூடப்படும் தடுப்புகள் அகற்றப்படும்' என்றனர்.

