சாலையில் சரிந்து விழுந்து ‘டிவி’ தொகுப்பாளர் இறப்பு
சாலையில் சரிந்து விழுந்து ‘டிவி’ தொகுப்பாளர் இறப்பு
ADDED : நவ 02, 2026 08:31 PM

அ நிறம் | அளவு
மீனம்பாக்கம்: நங்கநல்லுார், ஏ.ஜி.எஸ்., காலனியைச் சேர்ந்தவர் பரத்குமார், 48; ‘மாலை முரசு’ தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளர்.
இன்று (நவ.,2) காலை, ‘டி.வி.எஸ்., ராடிசன்’ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இவர், மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலையோரம் திடீரென வாகனத்தை நிறுத்தினார். மூச்சு விட முடியாமல், அப்படியே சாலையில் சரிந்தார்.
அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தகவலையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர்கள் அங்கு வந்து பரிசோதனை செய்ததில், மாரடைப்பால் பரத்குமார், ஏற்கனவே இறந்தது தெரிந்நதது. மீனம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
