/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவனிடம் போன் பறிப்பு அமைந்தகரையில் இருவர் கைது
/
மாணவனிடம் போன் பறிப்பு அமைந்தகரையில் இருவர் கைது
ADDED : மே 17, 2025 12:22 AM
அமைந்தகரை ;அம்பத்துார், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அஸ்வின், 18. இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், நேற்று முன்தினம் மாலை, தன் நண்பரான தீபக், 18, என்பவருடன், மெரினா கடற்கரைக்கு, இருக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக சென்றபோது, அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அஸ்வினிடம் லயோலா கல்லுாரிக்கு வழி கேட்டுள்ளனர்.
வழி சொல்லுவதற்காக கையை காட்டிய போது, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த நபர், அஸ்வின் கையில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர்.
புகாரின்படி, அமைந்தகரை போலீசார் விசாரித்து, சூளைமேடு, நமச்சிவாயபுரத்தை சேர்ந்த பழைய குற்றவாளி பரத், 23, அவரது கூட்டாளி கே.கே., நகரை சேர்ந்த சாய்தர்ஷன், 23, ஆகிய இருவரையும், கைது செய்து சிறையில் அடைத்தனர்.